Post view

All About North East Monsoon of India

All About North East Monsoon of Tamil Nadu:

 

Refer the photos you will understand on your own. How exactly it happens in layman terms. Since our monsoon is going to onset in the next 3-4 weeks. Let us see what is the power house of our NEM and why there is more cyclones in NEM rather than South West Monsoon

ITCZ and movemet of Sun
-------------
The Inter-Tropical Convergence Zone (ITCZ) appears as a band of clouds near the equator. The solid band of clouds may extend for many hundreds of kms. This is due to convergence of the trade winds. In the northern hemisphere the northeast trade winds converge with southeast winds from the Southern Hemisphere. The point at which the trade winds converge forces the air up into the atmosphere, forming the ITCZ. The ITCZ follows the sun in that the position varies seasonally. It moves north in the Northern Hemisphere summer and south in the Northern Hemisphere winter. Therefore, the ITCZ is responsible for the wet and dry seasons in the tropics.

When the ITCZ is located in North India during July, the south westerly wind prevails as far inland into India and bring rain fall during the wet season for most of India and its called South West Monsoon. During October / November, ITCZ moves down as the sun moves down during this phase, the north-east winds prevail over Bay of Bengal producing the dry-season for most of India except for Tamil Nadu this is called North East Monsoon. In January to March it goes below Equator and thereby resulting in dry season for most of India except North India (Himachal and Kashmir) which gets rains from Western Disturbance.

Which areas get more rains in TN and Chennai - Refer the photos
-----------------------------------
This NEM period is very short for us. Mostly the rains will start from October and November is our peak month for Rains. During December the south TN gets more rains than Chennai because the ITCZ will move down further. The more the ITCZ stays close to us, more the rains. Further, we should also remember the role of MJO, an equatorial wave which brings rainfall, our rains depend upon mjo a lot. The more active the mjo the more our rains. If MJO moves out of Indian ocean our rains reduce. Else, we should depend upon some cyclones which will help us. If cyclones move away then our rains reduce a lot. So in overall, its a complex monsoon with peak period being just two months. Lot of luck involved too. The areas from Sriharikota to Vedaranayam coast gets 70% of the rains from North East monsoon. Thoothukudi gets 90% of their annual rains from NEM. So a failure in North east monsoon always ends in drought in these places and rightly so as North east monsoon are erratic compared to South West monsoon which are more stable. Last year we had over 60% deficient NEM rains for the state. These things never happen to SWM. As we go inland, the areas such as Krishnagiri, Salem, Dharampuri gets least rains from NEM. In Nilgiris, Coonoor-Ketti valley get heavy rainfall from North East monsoon as its valley opens from east side and the easterlies get trapped in the valley and dump huge rains.

Hope this was useful in layman language. Last 4 photos on MJO on past years you can leave it. Its bit difficult for layman to grasp it.

 

****************************************************************

வடகிழக்கு பருவ மழை குறித்து தெரிந்து கொள்ளலாம்
வணக்கம் தமிழக மக்களே….
வடகிழக்கு பருவமழை அடுத்த 2 வாரங்களில் தமிழகத்தில் தொடங்க இருக்கிறது. அதற்குள் வடகிழக்கு பருவமழை குறித்து கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். சாமானிய மனிதரும் தெரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக அளித்து, அதற்கான புகைப்படங்களையும் இணைத்துள்ளேன். கொஞ்சம் புரிந்தால், போதும், போகப்போக, நீங்கள் அனைத்து விதமான விஷயங்களையும் புரிந்துகொள்வீர்கள். 
===========================
பள்ளிக்கூடங்களில் என்னை பேச அழைக்கும்போது நான் “உள்வெப்பமண்டல ஒருங்கிணைவு மண்டலம்”(The Inter-Tropical Convergence Zone (ITCZ)) குறித்தும் நமது பருவமழை குறித்தும் பேசுவேன். எப்படி பருவமழை பெய்கிறது என சாமானிய மக்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைப்பேன். வடகிழக்கு பருவமழை அடுத்த 3 வாரங்களில் தொடங்கப் போகிறது. இந்த சூழலில் தென் மேற்கு பருவமழையைக் காட்டிலும் வடகிழக்கு பருவமழையின் போது அதிகமான புயல்கள் ஏன் உருவாகின்றன என்பதை பார்க்கலாம்.

உள்வெப்பமண்டல ஒருங்கிணைவு மண்டலம் மற்றும் சூரியனின் நகர்வும்……
-------------------------------------------------
பூமித்திய ரேகைக்கு அருகே இருக்கும் மேகக்கூட்டங்களில் உள்வெப்பமண்டல ஒருங்கிணைவு மண்டலம் தோன்றுகிறது. இந்த அடர்த்தியான மேகக்கூட்டம் நூற்றுக்கணக்கான கி.மீ தொலைவுக்கு பரந்து கிடக்கும். பூமியின் தென்பகுதியில் இருந்து வரும் தென்கிழக்கு காற்றோடு, வடகிழக்கு காற்று பூமியின் வடபகுதியில் ஒருங்கினையும். இரு காற்றுகளும் இணையும் புள்ளியே உள்வெப்பமண்டல ஒருங்கிணைவு மண்டலமாகும். 
சூரியனை மையமாக வைத்து உள்வெப்பமண்டல ஒருங்கிணைவு மண்டலம் பருவநிலைக்கு ஏற்றார்போல் மாறுபடும். கோடைகாலத்தில், வடபகுதியை நோக்கியும், குளிர்காலத்தில் தென் பகுதியை நோக்கியும் நகரும். ஆதலால், வெப்ப மண்டலங்களில் பருவநிலை வறண்டு போவதற்கும், மழை பெய்வதற்கும் உள்வெப்பமண்டல ஒருங்கிணைவு மண்டலம் முக்கிய காரணமாகும்.

ஜூலை மாதத்தில் உள்வெப்பமண்டல ஒருங்கிணைவு மண்டலம் வடஇந்தியாவில் இருக்கும். அப்போது, தென் மேற்கு பகுதியில் இருந்து வீசும் காற்றால் கிடைக்கும் மழையே தென் மேற்கு பருவமழையாகும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் உள்வெப்பமண்டல ஒருங்கிணைவு மண்டலம் சூரியனின் நகர்வுக்கு ஏற்றார் போல் கீழே இறங்குவதால், வடகிழக்கு காற்று வீசும் போது இந்தியாவில் தமிழகத்தைத் தவிர்த்து பெரும்பாலான பகுதியில் மழை இல்லாமல் வறட்சி நிலவும், இதற்கு வடகிழக்கு பருவமழையாகும். இந்த வடகிழக்கு பருவமழையில் தமிழகம் அதிகமான மழையைப் பெறும். 
ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலங்களில் பூமத்திய ரேகைக்கு கீழே உள்வெப்பமண்டல ஒருங்கிணைவு மண்டலம் செல்வதால், இமாச்சலப்பிரதேசம், காஷ்மீர் மாநிலங்களில் கடும் மழை இருக்கும். மற்ற மாநிலங்களில் வறண்ட வானிலை இருக்கும்.

வடகிழக்கு பருவமழை காலம் மிகக்குறுகியதாகும். அக்டோபரில் மழை தொடங்கி நவம்பரில் உச்சத்தை அடையும். டிசம்பர் மாதத்தில், சென்னையைக் காட்டிலும் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் அதிக மழையைப் பெறும், ஏனென்றால், உள்வெப்பமண்டல ஒருங்கிணைவு மண்டலம் மேலும் பூமத்தியரேகைக்கு கீழே இறங்குவதால், இந்த மழை ஏற்படும். 
தமிழகத்துக்கு பக்கத்தில் உள்வெப்பமண்டல ஒருங்கிணைவு மண்டலம் வரும்போது அதிகமான மழை கிடைக்கும். நமக்கு கிடைக்கும் மழை என்பது, கடற்கரையில் நிலவும் தட்பவெப்பநிலையைக் குறிக்கும் “மேடன் ஜூலியன் ஆசிலைேசசன்”( MJO) பொருத்து அமையும்.
இல்லாவிட்டால், நாம் மழைக்கால சில புயல்களை நம்பிக்கி இருக்க வேண்டியது இருக்கும். ஒருவேளை புயல் நம்பக்கம் வராமல் சென்றுவிட்டால், மழை கிடைக்காது. ஆதலால், அடுத்து வரும் 2 மாதங்கள் கொஞ்சம் குழப்பமான மாதமாகவே இருக்கும். அதேசமயம் அதிகமான அதிர்ஷ்டமும் கலந்திருக்கும்.

ஆந்திராவின் ஹரிகோட்டா முதல் வேதாரண்யம் வரை 70 சதவீதம் மழை வடகிழக்கு பருவமழையில் கிடைக்கும், தூத்துக்குடிக்கு கிடைக்கவேண்டிய 90 சதவீதம மழை வடகிழக்கு பருவமழையில் கிடைக்கும். இது பொய்க்கும் போது அனைத்தும் வறண்டுவிடுகிறது.
தென் மேற்கு பருவமழையைப் போல் அல்லாமல், வடகிழக்கு பருவமழை ஒழுங்கானது அல்ல. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 60 சதவீதம் நமக்கு பற்றாக்குறையாக இருந்தது. ஆனால், இதுபோல் தென் மேற்கு பருவமழையில் இருக்காது.

கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி ஆகிய பகுதிகள் வடகிழக்கு பருவமழையின் போது குறைவான மழையை பெறும், நீலகிரி, குன்னூர் கேட்டி பள்ளத்தாக்கு பகுதிகள் கனமழையைப் பெறும்.

நான் கூறிய இந்த விளக்கம் சாமானிய மக்களுக்கும் புரியும் என நினைக்கிறேன். சில விஷயங்கள் புரியவில்லை என்றால் தவிர்த்து விடுங்கள்

 

 

 

 

 

 

 

 

Meril Jeffery John 04.10.2017 0 295
Comments
Order by: 
Per page:
 
  • There are no comments yet
Rate
0 votes
Actions
Recommend
Categories
History (5 posts)
Nature (1 posts)
News (2 posts)
Philosophy (1 posts)